Wednesday, March 10, 2010
பேசின் கி கிரேவி சப்ஜி - பீஹார் ஸ்பெஷல்
இது பீஹார் பக்கம் ஒரு பாபுலர் சைடு டிஷ். நாம் இதை செய்து பார்க்கலாமா?
ரொட்டி சப்பாத்தி இவற்றுக்கு தொட்டுக்கொள்ள இதை செய்யலாம்.
கடலை மாவு இரண்டு கப், தனியா பொடி ஒரு டீ ஸ்பூன், மிளகாய் பொடி ஒரு டீ ஸ்பூன், உப்பு, மஞ்சள்பொடி ,ஒரு வெங்காயம், தக்காளி பழம் ஒன்று, எண்ணெய் ஒரு டீ ஸ்பூன்.
கடலை மாவுடன் தனியா பொடி, மிளகாய் பொடி, உப்பு ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக பிசையவும். சப்பாத்தி மாவு போல் இது இருக்க வேண்டும். இந்த மாவை நீளமாக , கயிறு போல் உருட்டவும். ஒரு குக்கரில் தண்ணீர் வைத்து தட்டில் இந்த மாவு கயிற்றை ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். இந்த மாவு கயிற்றை வெளியே எடுத்து ஒரு கத்தியால் வட்டம் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் சீரகம் ஒரு ஸ்பூன் , வெங்காயம், தக்காளி இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் போட்டு கிளறவும். இத்துடன் அரை டீ ஸ்பூன் மஞ்சள் தூள் , ஒன்றரை டீ ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போனதும் ஒரு டம்ப்ளர் தண்ணீரை ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள மாவு துண்டங்களை போடவும். சற்று உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இறக்கி வைத்து கொத்த மல்லி கிள்ளிப்போடவும்.
சுவையான பேசன் கி சப்ஜி ரெடி - செய்து பார்த்து பின்னூட்டம் இடவும்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல சமையல் குறிப்புகள்
ReplyDeleteலக்ஷ்மி மேடம், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.