..அருமையான சமையலுங்க அடிக்கடி வந்து போங்க..

Tuesday, March 9, 2010

சொம்பு கொழுக்கட்டை தமிழ் ரெசிபி

ஒரு மாறுதலுக்கு இப்போ ஒரு தமிழ்நாட்டு டிபன் பார்ப்போமா?

எங்க கிராமத்து பாட்டி செய்யும் என் பேவரிட் டிபன் இது.   நிச்சயம்  புதுமையானது நீங்களும் தான் செய்து பாருங்களேன்

ஒரு டம்பளர் பச்சரிசி அரை டம்பளர் புழுங்கரிசி ஒரு டேபிள் ஸ்பூன் கடலைபருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு நிறைய பச்ச மிளகாய்  நிறைய மிளகாய் வற்றல் , உப்பு , கடுகு ஒருஸ்பூன் எண்ணெய் (தாளிக்க), ஒரு மூடி தேங்காய் (துருவியது)



அரிசி பருப்பு மிளகாய்  இவற்றை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு உப்பு பெருங்காயம் , தேங்காய் (துருவியது) சேர்த்து ,கிரைண்டரில் தண்ணீர் ஊற்றி அரைக்கவும் - மிகவும் நைசாகவும் இருக்க கூடாது - மிகவும் பெரிசாகவும் இருக்க கூடாது - அடைக்கும் தோசைக்கும் இடைப்பட்ட பதத்தில் கெட்டியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்


ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் - குக்கர் பாத்திரமாக இருக்கலாம்.


தண்ணீர் கொதிக்கும் போது அரைத்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி தண்ணீரில் போடவும் அவை நன்றாக வெந்ததும் தண்ணீரில் மிதந்து வரும் இவற்றை தனியே எடுத்து வைத்து கொள்ளவும் - தண்ணீர் போதாவிட்டால் இன்னும் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும் ஒரு டம்பளர் மாவை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்


இலுப்பசட்டியில் சிறிது எண்ணை வைத்து சுட்டதும் சிறிது கடுகை வெடிக்கவிட்டு தண்ணீரை ஊற்றி கொதிவந்ததும் வேகவைத்த உருண்டைகளையும் எடுத்து வைத்த மாவையும் போட்டு, சிறிது உப்பு போட்டு மூடிவிடவும் நன்றாக வெந்ததும் இறக்கி வைத்து விடவும் நன்றாக ஆறியவுடன் சாப்பிட்டால் சொர்கம்தான்

செய்து பார்த்து எழுதுகளேன்.













1 comment:

  1. சொம்பு கொழுக்கட்டையிலெ தெரியுது தமிழ்னு...

    ReplyDelete